மாற்றம்
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
மனிதனை மேம்படுத்தும் மாற்றங்கள் தான் தேவை!
நிச்சயமாக மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் நிலையானது இல்லை!
அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல் குர்-ஆன் 30:11)
எந்த ஓர் மனிதனும் மரணத்தை உணராமல் இல்லை.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (அல் குர்-ஆன் 30:40)
நல்ல மாற்றங்களை தோற்றுவிக்க இறையச்சம் தான் தேவை!
மனிதனின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இறைவன்.
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான். (அல் குர்-ஆன் 76:31)
Explore posts in the same categories: Uncategorizedகுறிச்சொற்கள்: மாற்றம்
You can comment below, or link to this permanent URL from your own site.